

வாடிகன் நகரத்துக்கு பிரான்ஸின் தூதராக ஸ்டெஃபனி என்ற தன்பாலின உறவாளரை பிரான்ஸ் நியமித்துள்ளது. தன்பாலின உறவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாடிகன் இந்த நியமனத்தை ஏற்க தயக்கம் காட்டி வருகிறது.
வாடிகன் தயக்கம் கொள்வதாக கத்தோலிக பிரஞ்சு நாளிதழ்களில் செய்திகள் வெளியான நிலையில் அதனை வாடிகன் நிராகரித்துள்ளது. இது குறித்து அந்த நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், "பொதுவாக தூதர் நியமனத்தை ஏற்க ஒரு மாத காலமாவது எடுத்துக்கொள்ளப்படும். அப்படிதான் இந்த கால தாமதமும்" என்று வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் அதிபர் ஹலாந்தேயின் நெருங்கிய நண்பரான லாரென்ட் ஸ்டெஃபனி கடந்த ஜனவரியில் வாடிகனுக்கு தூதராக நியமிக்கப்பட்டார்.
இருப்பினும் இந்த நியமனம் குறித்து வாடிகன் ஏற்பு தெரிவித்து அங்கீகரிக்காமல் உள்ளது.
பிரான்ஸின் தூதராக நியமிக்கப்பட்ட ஸ்டெஃபனி திறமை வாய்ந்தவர் என்பதாலேயே அவரை தேர்வு செய்ததாக பிரான்ஸ் தரப்பு தெரிவித்தது.
ரோம் நகரில் பிரான்ஸ் தூதரகத்துக்காக பணியாற்றிய போது தன்னை ஒரு தன்பாலின உறவாளராக ஸ்டெஃபனி அறிவித்துக்கொண்டார்.