

இலங்கை மீன்வளத்தை யார் சுரண்ட முயன்றாலும் சர்வதேச அமைப்பிடம் புகார் செய்வோம் என்று அந்த நாட்டு அமைச்சர் ரஜிதா சேனரத்னா தெரிவித்துள்ளார்.
பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிப்பதில் தமிழக, இலங்கை மீனவர்களிடையே நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் கைது செய்வது அன்றாட நிகழ்வாகி உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில் மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை மீன் வளத் துறை அமைச்சர் ரஜிதா சேன ரத்னாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக கொழும்பில் திங்கள்கிழமை அவர் கூறியதாவது:
இந்திய மீன் வளத்தை யார் சுரண்ட முயன்றாலும் சர்வதேச அமைப்பிடம் முறையிடுவோம். இந்தியாவில் ஆட்சி மாறி னாலும் வெளியுறவுக் கொள் கையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று நம்புகிறோம். நிர்வாக ரீதியாக வேண்டுமானால் மாற்றங்கள் இருக்கலாம்.
இவ்வாறு அமைச்சர் ரஜிதா சேனரத்னா தெரிவித்தார்.