

ஒரு நிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ் ஆகும் செல்போன் பேட்டரியை அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இது தொடர்பாக விஞ்ஞா னிகள் குழுவின் தலை வரும், வேதியியல் துறை பேராசிரியருமான ஹாங்கி டாய் கூறியது:
இப்போது செல்போன் களில் பயன்படுத்தி வரும் லித்தியம் மற்றும் அல்காலின் பேட்டரிகளுக்கு பதிலாக அலுமினியம் பேட்டரியை புதிதாக வடிவமைத்துள் ளோம். இதனை அதிவிரை வாக சார்ஜ் செய்ய முடியும். இது தவிர தீப்பிடிப்பது உள்ளிட்ட அபாயங்கள் இதில் இருக்காது.
மேலும் மற்ற பேட்டரிகளை போல சுற்றுச்சூழலையும் இந்த அலுமினியம் பேட்டரி கள் கெடுக்காது. லித்தியத் துடன் ஒப்பிடும்போது அலுமினியம் விலை மலிவானது.
இந்த பேட்டரிகளை வளைக்கவும், மடிக்கவும் கூட முடியும். செல்போனில் மட்டுமல்லாது லேப்டாப், டேப்லெட் உட்பட பல்வேறு வகையான மின்னணு சாதனங்களில் இந்த புதிய பேட்டரிகளை பயன்படுத்த முடியும் என்றார்.
இந்த புதிய கண்டுபிடிப்பு செல்போன் மற்றும் பேட்டரி தயாரிப்புத் துறையில் ஏற்பட்டுள்ள புரட்சியாகவே கருதப்படுகிறது.