Last Updated : 01 Apr, 2015 10:39 AM

 

Published : 01 Apr 2015 10:39 AM
Last Updated : 01 Apr 2015 10:39 AM

உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: பெரு பிரதமர் அனா ஜாரா பதவி நீக்கம்- 4 ஆண்டுகளில் 7 பிரதமர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர் கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரையும் உளவு பார்த்த குற்றச்சாட்டின்பேரில் பெரு பிரதமரை அந்நாட்டு அதிபர் பதவி நீக்கம் செய்துள்ளார்.

பெருவின் பிரதமராக கடந்த 2014-ம் ஆண்டு அனா ஜாரா பொறுப்பேற்றார்.

கடந்த மார்ச் 19-ம் தேதி, கொர்ரியோ செமானல் என்ற இதழில், பெரு நாட்டின் உளவு அமைப்பான தேசிய புலனாய்வு இயக்ககம் (டினி) யார் யாரைப் பற்றி விசாரித்து உளவறிந்தது என்ற பட்டியல் வெளியானது. இதில், அரசியல்வாதிகள், அவர்களது குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர் கள், ஆயிரக்கணக்கான குடிமக்கள் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து பிரதமர் அனா ஜாராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

பெருவைப் பொறுத்தவரை அந்நாட்டு அதிபருக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டை அனா ஜாரா மறுத்தபோதிலும், அவரைப் பதவி நீக்கம் செய்து அதிபர் ஓலந்தா ஹுமாலா உத்தரவிட்டுள்ளார்.

பெருவில் அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்படுகின்றனர். கடந்த 2011 மார்ச் 19-ம் தேதி முதல் இதுவரை 7 பிரதமர்கள் பொறுப்பேற்று விலகியுள்ளனர். இதில், 6 பிரதமர் களை தற்போதைய அதிபர் ஓலந்தா ஹுமாலா நியமித்துள்ளார். கடந்த 1968-க்குப் பிறகு பெருவில் பிரதமர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x