

ஆஸ்திரேலியாவில் மர்ம நபரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட இந்திய பெண், முன்னதாக மர்ம நபர் தன்னை நெருங்கி வந்ததை பார்த்துள்ளதுடன், தாக்க முற்பட்டபோது வேண்டாம் என்று கெஞ்சி உள்ளார். எனவே, பலாத்கார முயற்சி நடைபெற்றதா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பெங்களூரைச் சேர்ந்த பிரபா அருண் குமார் (41) சிட்னி நகரில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். கடந்த சனிக் கிழமை இரவு 9.30 மணியளவில் பணி முடிந்து சிட்னி நகரில் பாராமட்டா பூங்கா வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபரால் குத்திக் கொல்லப்பட்டார்.
ஆஸ்திரேலிய போலீஸார், முதன்மை புலனாய்வு கண்காணிப் பாளர் மைக்கேல் வில்லிங் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
பிரபா கொல்லப்படுவதற்கு முன்பு, பெங்களூரில் உள்ள தனது கணவர் அருண் குமாருடன் செல் போனில் பேசியபடியே சென்றுள் ளார். எனவே, ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள அருண் குமாரிடம் பிரபாவுடனான செல்பேசி உரையாடல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
குத்தி விட்டான், அவன் என்னைக் குத்தி விட்டான்’ என்று பிரபா என்னிடம் கூறினார். பின்னர் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதைக் கேட்டு பதறிப்போனேன்” என்றார்.
`என்னைக் இதுகுறித்து அருண் குமார் கூறும்போது, “யாரோ ஒருவர் பின்புறமிருந்து வருவதை பிரபா பார்த்துள்ளார். அந்த நபர் பிரபாவைக் கடந்து சென்றதும் திடீரென திரும்பி உள்ளார். இதனால் என்னைத் தாக்க வேண்டாம் என்று பிரபா கூச்சலிட்டார். உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனாலும் சிறிது நேரத்தில் கூர்மையான பொருளால் பிரபாவின் தொண்டையில் மர்ம நபர் கிழித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு சிட்னியின் மேற்குப் பகுதியில் தொடர்ந்து பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றன. எனவே, பிரபாவின் கொலைக்கும் பலாத்கார முயற்சி காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் போலீஸில் அது குறித்து தெரிவிக்கலாம் என்று போலீஸ் அதிகாரி மைக்கேல் அப் பகுதி மக்களைக் கேட்டுக்கொண் டுள்ளார்.
விசாரணை நடைபெற்று வருவதால் பிரபாவின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.