Published : 22 May 2014 08:57 PM
Last Updated : 22 May 2014 08:57 PM

புகைப் பிடிப்போருக்கு மின் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடையாது: ராஜஸ்தான் அரசு அதிரடி

புகைப் பிடிப்பிடிப்பவர்களுக்கும் புகையிலை பொருட்களைப் பயன்படுத்துப்பவர்களுக்கும் அரசு மின்சார நிறுவனங்களில் இனி வேலைவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்த ஆணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்று அம்மாநில எரிசக்தித் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அம்மாநில அளவிலான புகையிலை தடுப்பு குழு ஒன்று புகைப் பிடிப்பவர்களுக்கும், புகையிலை பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கும் அரசுப் பணி வழங்கக்கூடாது என்று பரிந்துரைத்தது.

இது தொடர்பாக கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அம்மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன், சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால், சில அரசுத் துறைகள் இதனை அமல்படுத்தாமல் வைத்திருந்தன.

மின்சாரத் துறையில் வேலைக்கு சேர விரும்புபவர்கள், தான் புகைப்பிடிக்கவில்லை என்பதையும், புகையிலை பொருட்கள் பயன்படுத்தவில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த ஆணையை, பல அரசு சாரா நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. இதுகுறித்து, ஜெய்பூரைச் சேர்ந்த இனயா தொண்டு நிறுவனமத்தின் நிதிஷா ஷர்மா கூறுகையில், "இதுபோன்ற நடவடிக்கைகள் புகைப் பிடித்தலையும், புகையிலை பொருட்களின் பயன்பாட்டையும் நிச்சயமாக கட்டுப்படுத்தும்" என்று தெரிவித்தார்.

மேலும், புகையிலை பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு அப்பழக்கத்தை கைவிட போதிய வசதிகள் உள்ளன. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயை உண்டாக்கி பலநூறு உயிர்களைக் கொல்லும் புகையிலை பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் அப்பழக்கத்தை கைவிட உதவ ஒருசில நிபுணர்களே உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

சமீபத்திய கணக்கெடுப்புபடி, இந்தியாவிலுள்ள ஆண்களுக்கு புகையிலை பயன்படுத்துவதால் 40% முதல் 50% வரை புற்றுநோய் உண்டாக்கிறது. இதுவே, பெண்களுக்கு 17% முதல் 20% வரை புற்றுநோய் உண்டாக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x