மியான்மரில் துயர சம்பவம்: கடலில் படகு மூழ்கி 50 பேர் பலி

மியான்மரில் துயர சம்பவம்: கடலில் படகு மூழ்கி 50 பேர் பலி
Updated on
1 min read

மியான்மரில் கடலில் படகு மூழ்கி 50 பேர் உயிரிழந்தனர். இதில் ஏராளமானோர் பெண்கள்.

மேற்கு மியான்மர் கடல் பகுதியில் நேற்று சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களுடன் ஒரு பெரிய பயணிகள் படகு சென்று கொண்டிருந்தது. கியாபிக்யூ துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த இந்த படகு நடுக்கடலில் திடீரென மூழ்கியது. இதனால் படகில் இருந்தவர்களில் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மியான்மர் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். எனினும் பலர் கடலில் மூழ்கி இறந்துவிட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். 50 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 167 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

மேலும் பலரை காணவில்லை. எனவே அவர்கள் உயிரிழந் திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

படகில் பெருமளவில் சரக்கும், அளவுக்கு அதிகமான பயணிகளும் ஏற்றப்பட்டிருந்ததே விபத்துக்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மியான்மரில் இதுபோன்ற படகு விபத்து நிகழ்வது வழக்கமாகி வருகிறது. பழைய படகுகளை பயன்படுத்துவது, அளவுக்கு அதிகமான சரக்குகளையும், பயணிகளையும் ஏற்றுவது போன்றவை விபத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளது.

இதுபோன்ற தவறுகளால் அங்குள்ள நதி, கடலில் ஆண்டுதோறும் படகுகள் கவிழ்ந்து விபத்து நடந்து வருகிறது. ஆனால் இந்தமுறை உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு 2008-ல் அதிகபட்சமாக 38 பேர் வரை உயிரிழந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in