

மலேசியாவில் 2 சாக்லேட் ரகங்களில் பன்றி இறைச்சி மரபணுக் கூறுகள் இருப்பதாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து, காட்பரி நிறுவனம் வாபஸ் பெற்றது.
இஸ்லாமிய நாடான மலேசியாவில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களில் இஸ்லாம் மதத்தில் விலக்கப்பட்ட பன்றி இறைச்சி இருக்கிறதா என்று அவ்வப்போது சோதனை செய் யப்படும்.
அதுபோன்று மேற்கொள் ளப்பட்ட சோதனையில் காட்பரி நிறுவனத்தின் 2 சாக்லேட் ரகங் களில் பன்றி இறைச்சிப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த சாக்லேட் களை விற்பனை செய்வதை அந்நிறுவனம் ரத்து செய்து விட்டது. கடைகளில் உள்ள சாக்லேட்களை வாபஸ் பெறும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக மலேசிய சுகாதாரத் துறை அமைச்சர் எஸ்.சுப்பிரமணியம் கூறுகையில், “இந்த சாக்லேட்களை சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்தனர். அதில் அனுமதிக்கப்படாத பொருள் இருப்பது கண்டறியப் பட்டது.
இதை அறிந்த அந் நிறுவனத்தினர் தாங்களாகவே முன்வந்து, 2 சாக்லேட் ரகங்களின் விற்பனையை ரத்து செய்து விட்டனர். இந்த சாக்லேட்களில் பன்றி இறைச்சி தொடர்பான பொருள்கள் எவ்வாறு கலந்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
தங்களின் மற்ற சாக்லேட்களில் ஹலால் பொருள்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக தெரிவித் துள்ள காட்பரி நிறுவனம், அது தொடர்பான ஆய்வக அறிக்கை களை இஸ்லாம் மதத்தலைவர் களிடம் அளித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்” என்றார்.
பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவன மான மோன்டிலிஷ் இன்டர்நேஷன லின் அங்கமான காட்பரி மலேசியா நிறுவனம், பன்றி இறைச்சி காணப் படுவதாக புகார் வந்ததால் காட்பரி டெய்ரி மில்க் ஹாஸெல்நட், காட்பரி டெய்ரி மில்க் ரோஸ்ட் அல்மாண்ட் ஆகிய சாக்லேட் ரகங்களை விற்பனையிலிருந்து வாபஸ் பெறுவதாக அறிவித் துள்ளது.
மலேசியாவில் ஹலால் சான்று பெற்ற சாக்லேட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய நெறிகளின்படி பன்றி இறைச்சி மற்றும் அதன் துணைப் பொருள்கள், மது, இயற்கையாக மரணமடைந்த விலங்குகள் ஆகியவற்றை சாப் பிடக்கூடாது. அவை ஹலால் அற்றவை (ஹராம்) என்று அழைக் கப்படுகின்றன. ஹலால் (உண்ணக்கூடியவை) உணவுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இதற்கிடையே ஹலால் அல்லாத பொருளை பயன்படுத்தி சாக்லேட் தயாரித்த காட்பரி நிறு வனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் தலைவர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.