Last Updated : 04 Mar, 2015 11:08 AM

 

Published : 04 Mar 2015 11:08 AM
Last Updated : 04 Mar 2015 11:08 AM

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 10

சவுதி அரேபியாவின் பள்ளிகளில் மாணவிகளுக்கு விளையாட்டு வகுப்புகள் கிடையாது என்ற நிலைதான் காலகாலமாக இருந்து வந்தது. அதில் சமீபத்தில் ஒரு மாற்றம். பள்ளி மாணவிகளுக்கும் இனி விளையாட்டு வகுப்புகள் உண்டு என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அரசின் இந்த ஆணைக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டனர் மதத் தீவிரவாதிகள்.

இத்தகைய எதிர்ப்புகளையும் மீறி பெண்களின் நிலைமை சவுதி அரேபியாவில் கொஞ்சூண்டு முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஒலிம்பிக்ஸில் சவுதி அரேபியாவின் சார்பில் முதல் முறையாக இரண்டு பெண்கள் பங்கேற்றனர். மகளிர் விளையாட்டு கிளப்களுக்கு லைசென்ஸ் வழங் கப்படுகிறது.

முதன் முறையாக செய்தித்தாள் ஒன்றுக்கு பெண் ஒருவர் ஆசிரியராக நியமிக் கப்பட்டிருக்கிறார். டாக்ஸியில் தனியாகச் செல்லலாம் என்கிற அளவுக்கு நிலைமையில் முன் னேற்றம்.

ஆனால் பெண்கள்மீது கிரிமினல் குற்றங்கள் சுமத்தத் தடையில்லை. உறவினர் அல்லாத ஆணுடன் பொது இடங்களில் பேசுவதுகூட தவறு. பெண்களுக் கென்று தனி வங்கிகள்.

ஆக பிணைக்கும் சங்கிலிகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அறுந்து விடவில்லை. பணி காரணமாகவோ, மருத்துவச் சிகிச்சைக்காகவோ வேறு நாடு களுக்கோ, அதே நாட்டின் வேறு பகுதிகளுக்கோ போக வேண்டு மென்றால் சவுதி அரேபிய பெண் கள் தங்கள் கணவர் அல்லது அப்பாவின் எழுத்துபூர்வ அனுமதியைப் பெற வேண்டும். அதாவது அந்த நாட்டின் பாதி மக்கள் தொகையான பெண்கள் மைனர்கள் போலவே நடத்தப் படுகிறார்கள்.

இரு மாதங்களுக்கு முன் ஒரு பெண்மணிக்கு 150 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டது. காரணம் அவர் காரோட்டியதுதான்.

கற்பழிக்கப்பட்ட பெண்களுக் குக்கூட நீதி கிடைப்பது அபூர்வம். கற்பழிப்புக்கு மரண தண்டனை என்கிறது சட்டம். ஆனால் கற்பழிக்கப்பட்ட பெண் நான்கு முஸ்லிம் ஆண்களை இதற்கு சாட்சியாக நீதிமன்றத்தில் கொண்டு நிறுத்த வேண்டும்.

அப்படி இல்லையென்றால் அவள் வீண்பழி சுமத்தியதாகக் கூறி அதற்கான தண்டனை உண்டு. கற்பழிக்கப்பட்ட கொடுமை போதா தென்று இந்த தண்டனை வேறா? எனவே சவுதி அரேபியாவில் கற்பழிப்பு வழக்குகள் மிக அரிதா கவே பதிவு செய்யப்படுகின்றன.

சவுதி கஜெட் என்ற இதழில் வெளியான செய்தி இது. 23 வயதான திருமணமாகாத பெண் ஒருவர், காரில் சென்ற ஒருவர் லிப்ஃட் கொடுப்பதாகக் கூற, அதில் ஏறிவிட்டார். ஜெட்டா நகரின் கிழக்கில் உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றது அந்தக் கார். அங்கு அந்தக் கார் ஓட்டுனரும், காத்திருந்த அவனது மூன்று நண்பர்களும் அன்று இரவு முழுவதும் பலாத்காரம் செய் தனர்.

பின்னர் அவள் கர்ப்பம் அடைந்தாள். கருச்சிதைவுக்கு முயற்சித்தாள். முடியவில்லை. எனவே மன்னர் ஃபக்த் மருத்துவ மனையில் கருச்சிதைவுக்கு விண்ணப்பித்தாள். அப்போது அவள் வயிற்றில் எட்டு வாரக் கரு உருவாகியிருந்தது. அவள் முறையற்ற உறவில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

மாவட்ட நீதிமன்றத்தில் அவள் குற்றவாளியாக கருதப்பட்டு, ஒரு வருட சிறையும், நூறு சவுக்கடி களும் தண்டனையாக அளிக்கப் பட்டன. குழந்தை பிறந்தவுடன் இந்த சவுக்கடிகள் அளிக்கப்படும் என்று கருணை காட்டியது நீதிமன்றம்!

இன்றளவும் குடும்பம் என்பது தான் மற்ற எந்த சமூக அமைப்பு களை விட சவுதி அரேபியாவில் முன்னணி வகிக்கிறது. ஒரே கூரை யின் கீழ் சகோதரர்கள் அவரவர் குடும்பங்களுடன் வசிப்பது என்பது அங்கு மிக இயல்பான ஒன்று. குடும்ப விஷயங்கள் வெளியே கசியக்கூடாது என்பதில் மிகுந்த கட்டுப்பாடு கொண்டவர்

கள். முக்கியமாக குடும்பத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான கோடு மிக அழுத்த மானது. வீட்டில் ஆண்கள் தனி யாகச் சாப்பிடவேண்டும். அவர் களுக்குப் பிறகே பெண்கள் (சிறுமி கள் உட்பட) சாப்பிடவேண்டும்.

பொது நிகழ்ச்சிகளிலும் கொண்டாட்டங்களிலும் கூட குடும் பத்தோடு சாப்பிடமாட்டார்கள். ஆண்களுக்குத் தனிப் பகுதி, பெண்களுக்குத் தனிப் பகுதி. முதலில் ஆண்கள் பகுதிக்குத்தான் உணவு பரிமாறப்படும். பிறகுதான் பெண்கள் பகுதிக்கு.

இளம் பெண்களும், இளம் ஆண்களும் உரையாடுவதற்கே ஆயிரம் சிக்கல்கள் எனும் சூழலில் இணையதளம், செல்போன் போன்ற வசதிகளை சாமர்த்திய மாக பயன்படுத்தத் தொடங்கியிருக் கிறார்கள் இளைய தலைமுறை யினர்.

அதே சமயம் பழமையில் ஊறிய நாடு என்பதற்காக சவுதி அரேபியா எல்லாவற்றிலுமே கற்காலத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்ளக் கூடாது. கல்வி அறிவு பெற்றவர்கள் இங்கு 80 சதவீதம் பேர். அந்த நாட்டில் ஆங்கிலம் பரவலாகப் பேசப்படுகிறது. பெரிய கடைகளில் அராபிக், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலுமே அறிவிப்புகளைப் பார்க்கலாம்.

பள்ளிகளில் ஆங்கிலமும் பயிற்றுவிக்கப்படுகிறது. சவுதி அரேபிய கல்விக் கூடங்களில் முதல் மொழி என்ன என்றால் அராபிக் என்று சொல்லிவிடுவீர்கள். 2-வது மொழி என்ன? ஆங்கிலம். அதுவும் அமெரிக்க ஆங்கிலம்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x