

வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப் பதற்காக, பெரு நிறுவன ஊழியர் களுக்கான எல்-1பி வேலை விசா பெறுவதற்கான நடைமுறைகளை அமெரிக்க அரசு எளிமையாக்கி உள்ளது. இதன் மூலம் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களும் அதன் ஊழியர்களும் பயனடைவார்கள்.
‘செலக்ட் யுஎஸ்ஏ சமிட்’ என்ற பெயரில் வெளிநாட்டு முதலீட் டாளர்களுக்கான உச்சி மாநாடு வாஷிங்டனில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியதாவது:
எல்-1பி விசா பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப்படும். பெரு நிறுவனங் கள் ஒரு வெளிநாட்டு கிளை அலு வலகத்தில் உள்ள திறமையான ஊழியர்களை அமெரிக்க அலு வலகத்துக்கு தற்காலிகமாக மாற்றுவதற்கு இந்த விசா பயன்படுகிறது.
இதன் மூலம் ஆயிரக்கணக் கான வெளிநாட்டு ஊழியர்களும் அவர்கள் பணிபுரியும் பெரு நிறுவனங்களும் பயன்பெறுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பல இந்திய நிறுவனங் களின் பிரதிநிதிகள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர்.