Published : 31 Mar 2015 10:40 AM
Last Updated : 31 Mar 2015 10:40 AM

குழந்தைகளை மீட்டுத் தருமாறு அமெரிக்க எம்.பி.க்களிடம் இந்தியப் பெண் கோரிக்கை: முன்னாள் கணவர் மீது குற்றச்சாட்டு

தனது முன்னாள் கணவர் சுனில் ஜேக்கப், குழந்தைகளை இந்தியாவுக்கு கடத்திச் சென்று விட்டார் என்றும் பிந்து குற்றம் சாட்டியுள்ளார். சுனில், பிந்து இரு வருமே கேரள மாநிலத்தை பூர்வீக மாக கொண்டவர்கள். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2008-ம் ஆண்டு பிரிந்து விட்டனர். இவர்களுக்கு ஆல்பர்ட், ஆல்பிரட் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உண்டு.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான துணைக் குழுவிடம் பிந்து, தனது குழந்தைகளை மீட்டுத்தர கோரிக்கை விடுத்துள்ளார்.

நியூஜெர்சியில் வசித்து வரும் பிந்து, தனது முன்னாள் கணவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார். 2008-ம் ஆண்டு நான் விடுமுறைக்காக இந்தியாவுக்கு சென்றிருந்தபோது, எனது முன் னாள் கணவர் இரு மகன்களையும் எனக்குத் தெரியாமலேயே அழைத்துச் சென்றுவிட்டார்.

நான் அமெரிக்காவுக்கு திரும்பிய பிறகு எனது இரு மகன்களையும் தொடர்பு கொள்ள பல வழிகளில் முயற்சித்தும் அதனை எனது கணவர் தடுத்து வருகிறார். எனது இரு மகன்களுக்கு இப்போது சுமார் 14-வயதாகிறது. அவர்கள் இல்லாமல் எனது வாழ்க்கை வெறுமையாகிவிட்டது. அவர்களுக் கும் தாய் அன்பு தேவை.

குழந்தைகளை என்னிடம் இருந்து பிரித்தது தொடர்பாக 2009-ம் ஆண்டிலேயே நியூஜெர்ஸி நீதி மன்றத்தை நாடினேன். அப்போது, எனது குழந்தைகளை பாது காக்கும் உரிமை எனக்கு வழங்கப் பட்டது.

ஆனால் என்னால் குழந்தை களை பார்க்கவோ, அவர்களுடன் பேசவோ முடியவில்லை. குழந்தை கள் மீண்டும் என்னோடு சேர எம்.பி.க்கள் குழு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x