Last Updated : 19 Mar, 2015 02:49 PM

 

Published : 19 Mar 2015 02:49 PM
Last Updated : 19 Mar 2015 02:49 PM

மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை: பாக். கைதியின் தூக்கு தண்டனை ஒத்திவைப்பு

பாகிஸ்தானில் சிறுவனை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஷஃபகத் ஹுசேனின் தூக்கு தண்டனை அடுத்த 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2004-ஆம் ஆண்டு சிறுவனை அறுத்து கொலை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர் ஷஃபகத் ஹுசேன். மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட இவரது வழக்கில், தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

கொலைச் சம்பவத்தின்போது ஷஃபகத் ஹுசேனுக்கு 14 வயதே ஆனது என்பதாலும், குற்றவாளியென ஒப்புகொள்வதற்காக காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்டாரா? என்று மறுவிசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணைய கோரிக்கை விடுத்ததாலும், இவரது தூக்கு தண்டனையை அடுத்து 72 மணி நேரங்களுக்கு ஒத்திவைக்க நீதிபதிகள் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் இந்த தூக்கு ஒத்திவைப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பெரிய ஆதரவோடும் பார்க்கப்படுகிறது. இருப்பினும் தூக்கு தண்டனை ஒத்திவைக்கப்பட்டதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் அரசு வெளியிடவில்லை.

2014-ல் நடந்த பெஷாவார் ராணுவப் பள்ளியில் தாலிபான்கள் நடத்திய கொடூரத் தாக்குதலை அடுத்து, தீவிரவாத தடுப்பு நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் 6 வருடங்களாக சிறையில் இருந்த மரண தண்டனை கைதிகளுக்கு தீர்ப்பு நிறைவேற்றப்பட்டு வருகிறது.

கலவரங்கள், கொலைக் குற்றங்கள் மற்றும் தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதுவரை அங்கு 48 கைதிகள் தூக்கிலேற்றப்பட்டனர்.

இன்னும் பல்வேறு சிறைகளில் மொத்தம் 8000 மரண தண்டனை கைதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x