உலகிலேயே முதியவர்: 111 வயது அமெரிக்கர்

உலகிலேயே முதியவர்: 111 வயது அமெரிக்கர்
Updated on
1 min read

உலகிலேயே மிகவும் முதிய ஆணின் வயது 111 ஆகும். அலெக் சாண்டர் இமிச் எனும் அந்த மூத்த மனிதர் நியூயார்க்கில் வசித்து வருகிறார்.

1903-ம் ஆண்டு போலாந்தில் பிறந்த இவர், 'சோவியத் குலாக்' எனும் கட்டாயத் தொழிலாளர் முகாமில் பல துன்பங்களை அனுப வித்தவர். 1950-களில் இவர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந் தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது 111-வது பிறந்த நாளைக் கொண்டாடிய இவர், கலிபோர்னியாவைச் சேர்ந்த ‘ஜெரன்டாலஜி ரிசர்ச் குரூப் ஆஃப் டார்ரன்ஸ்' எனும் அமைப்பினால், உலகிலேயே மிகவும் முதிய ஆண் என்று அடையாளம் காணப் பட்டுள்ளார்.

எனினும், இவரால் உலகி லேயே மிகவும் வயதான மனிதர் என்ற பட்டத்தைத் தட்டிச் செல்ல இயலவில்லை. காரணம், இவரை விட 66 பெண்கள் வயதில் மூத்த வர்களாக உள்ளனர். அதில் ஜப்பானைச் சேர்ந்த மிசாவோ ஒகாவா என்பவருக்கு 116 வயதாகிறது. கோழி இறைச்சியும், சாக்லெட்டுகளையும் அதிகமாக எடுத்துக்கொள்ளும் இவர், தனது தந்தையும் 90 வயது வரை வாழ்ந்தவர் என்பதைச் சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள் கிறார்.

1995-ம் ஆண்டு தனது 92வது வயதில், ‘இன்க்ரீடிபிள் டேல்ஸ் ஆஃப் பாராநார்மல்' எனும் புத்தகத்தைத் தொகுத்த இவர், இன்றும் எதிர்காலத்தைப் பற்றித் தான் சிந்தித்துக் கொண்டிருப்ப தாகக் கூறுகிறார்.

“எவ்வளவு நாட்கள் வாழ்கிறீர் கள் என்பதை விடவும், உங்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்ந் தீர்களா என்பது மிகவும் முக்கியம். நான் சாதிப்பதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் எதில், எப்போது என்பதில்தான் எனக்குச் சற்றுக் குழப்பம் உள்ளது” என்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in