அமெரிக்காவில் இந்திய மாணவி சுட்டுக் கொலை

அமெரிக்காவில் இந்திய மாணவி சுட்டுக் கொலை
Updated on
1 min read

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்த இந்திய மாணவி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 37.

இந்தியாவைச் சேர்ந்தவர் ரந்திர் கவுர். இவர் சான் பிரான்சிஸ் கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் தொடர்பான சர்வதேச படிப்பு ஒன்றை படித்து வந்தார். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அவர் படிப்பு முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில், கடந்த 8-ம் தேதி அல்பேனி நகரத்தில் உள்ள அவரது வீட்டில் மாலை சுமார் 4 மணியளவில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அதனைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் விசாரணையில், ரந்திர் கவுர் தனது வீட்டுக்குள்ளே வைத்து சுடப்பட்டிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. எனி னும், மர்ம நபர்கள் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததற்கான எந்த ஒரு தடயங்களும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. தவிர, அவரது கார் உள்ளிட்ட உடைமைகளுக்கும் எந்த ஒரு சேதமும் ஏற்படுத்தப்படவில்லை என்று போலீஸார் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in