Published : 11 Mar 2015 10:16 AM
Last Updated : 11 Mar 2015 10:16 AM

மோடி வருகை எதிரொலி: இலங்கையில் மனித உரிமை பெண் ஆர்வலர் விடுதலை

இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு அந்த நாட்டு சிறையில் அடைக் கப்பட்டிருந்த மனித உரிமை பெண் ஆர்வலர் ஜெயகுமாரி (50) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ராணுவத்தில் சரணடைந்து காணாமல் போன தனது மகன் மகேந்திரனை ஒப்படைக்கக் கோரி கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயகுமாரி பல்வேறு போராட்டங் களை நடத்தி வந்தார்.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த கோபி என்பவருக்கு ஆதரவு அளித்த தாக கடந்த ஆண்டு மார்ச்சில் ஜெயகுமாரி கைது செய்யப்பட் டார். அவரை விடுதலை செய்யக் கோரி பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்தப் பின்னணியில் மோடி இலங்கை செல்கிறார். இதை முன்னிட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த ஜெயகுமாரி விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

கொழும்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட அவர் ரூ.2 லட்சம் பிணைத்தொகையில் விடுவிக்கப்பட்டார். அவர் வெளி நாடு செல்ல நீதிபதி தடை விதித் தார். மேலும் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தர விட்டார்.

கணவரை இழந்த ஜெய குமாரிக்கு 3 மகன்கள், ஒரு மகள் இருந்தனர். மர்ம நபர் சுட்டதில் மூத்த மகன் உயிரிழந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த இரண்டாவது மகன் போரில் மரணமடைந்தார்.

மூன்றாவது மகன் மகேந்திரன் இறுதிகட்டப் போரின்போது ராணுவத்திடம் சரண் அடைந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் என்னவானார் என்பது தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x