Last Updated : 18 Mar, 2015 08:34 PM

 

Published : 18 Mar 2015 08:34 PM
Last Updated : 18 Mar 2015 08:34 PM

டுனீசியா அருங்காட்சியகத்தில் தீவிரவாத தாக்குதல்: 8 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான டுனீசியா தலைநகர் டூனிஸில் உள்ள அருங்காட்சியகத்தில் புகுந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த 7 பேரும் ஒரு உள்ளூர் நபரும் உயிரிழந்தனர். 6 பேர் குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளனர். டுனீசிய உள்துறை அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்தது.

ஏ.கே ரக துப்பாக்கிகளுடன் அருங்காட்சியகத்துக்குள் புகுந்த 3 தீவிரவாதிகள் அங்கிருந்த பார்வையாளர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்தியவர்கள் ராணுவ வீரர்களைப் போல உடையணிந்திருந்ததாக தெரியவந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்தபோது சுமார் 100 சுற்றுலா பயணிகள் அருங்காட்சியகத்துக்குள் இருந்தனர். 7 வெளிநாட்டவர் உள்பட 8 பேர் தாக்குதலில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. குண்டு பாய்ந்து காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். யாராவது சிலரை உள்ளே பிணைக்கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்துவைத்துள்ளனரா என்பது தெரியவில்லை.

தீவிரவாத தடுப்பு பிரிவினர் அருங்காட்சியகத்துக்குள் நுழைந்துள்ளனர். சுற்றுப்புற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார் டுனீசிய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களுடன் பிரதமர் ஹபீர் எசித் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x