

அமெரிக்காவின் ஹைதி தீவுக்கு அருகே மூழ்கிய பழங்காலக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்கப்பல் கொலம்பஸின் சான்டா மரியாவாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. உடனடியாக அதை மீட்காவிட்டால், அரிய பழம்பொருள்கள் திருடு போகும் அபாயம் உள்ளதாக, அதனைக் கண்டறிந்த தொல்லியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இத்தாலியைச் சேர்ந்த மாலுமி கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஆசியாவுக்கு குறுகிய தொலைவு டைய புதிய கடல்வழியைக் கண்டு பிடிப்பதற்காக 1492 ஆகஸ்ட் 3-ம் தேதி ஸ்பெயின் ராணி இஸபெல் லாவின் உதவியுடன் புறப்பட்டார்.
சான்டா மரியா, லா நினா, லா பின்டா எனப் பெயரிடப்பட்ட மூன்று கப்பல்களுடன் அவரின் கடல் பயணம் தொடங்கியது. அதே ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி குவானாஹனி எனும் தீவில் கொலம்பஸ் தரையிறங்கியதாக நம்பப்படுகிறது. அத்தீவு, பஹாமா விலுள்ள ஒரு தீவு என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்நிகழ்வே கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த வரலாறாகப் புகழ் பெற்றது.
மூன்று கப்பல்களுள் ஒன்றான ‘சான்டா மரியா’, 1492 டிசம்பர் 25-ம் தேதி ஹைதி தீவு அருகே விபத்துக்குள்ளாகி மூழ்கியது.
கப்பல் கண்டுபிடிப்பு
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற கடல்-அகழ் வாராய்ச்சியாளர் பாரி கிளிப்போர்டு, ‘சான்டா மரியா’வைக் கண்டுபிடித் துள்ளதாகக் கூறியுள்ளார்.
கடலுக்கடியில் கண்டுபிடிக் கப்பட்டுள்ள அக்கப்பல், கொலம் பஸின் ‘சான்டா மரியா’தான் என்ப தற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2003-ம் ஆண்டு அக் கப்பலைக் கண்டறிந்த அவர், அது சான்டா மரியாதான் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களைத் திரட்ட 11 ஆண்டுகள் ஆயின எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: அக்கப்பலை உடனடியாக மீட்க வேண்டும். இல்லாவிட்டால், அதன் பொருள்கள் கொள்ளை போகும் அபாயம் உள்ளது. அக்கப்பலை மீட்டு பாதுகாத்து, உலகின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
ஹைதி அரசுடன் இது தொடர்பாகப் பேச்சு நடத்தி வருகிறேன். அனுமதி கிடைத்ததும் உடனடியாக அகழ்வுப் பணிகள் தொடங்கப்படும்.
தற்போது, ஹைதி அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கொலம்பஸின் கப்பல் அகழ்ந்தெடுக்கப்பட்டால், அதிலிருந்து கிடைக்கும் வருவாயை ஹைதி அரசு பயன் படுத்திக் கொள்ளலாம். கொலம்ப ஸின் பயணத்துக்கு உதவியது ஸ்பெயின் என்ற அடிப்படையில், தற்போது இப்பணிக்கும் ஸ்பெயின் ஒத்துழைப்பு வழங்கும் என நம்பு கிறேன். இவ்வாறு, கிளிப் போர்டு தெரிவித்துள்ளார்.