

ஐ.எஸ். இயக்குத்துக்கு எதிரானப் போரில் ராணுவ உதவி அளித்து பாகிஸ்தான் உதவிட வேண்டும் என்று சவுதி அரேபியா கேட்டுக் கொண்டுள்ளது.
சவுதி அரேபிய எல்லைகளை குறிவைத்திருக்கும் ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான போரில், ராணுவ உதவி கோரி பாகிஸ்தானிடம் சவுதி அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சவுதி பயணத்தின்போது பேச அந்நாடு திட்டமிட்டுள்ளதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தியில் குறிப்பிடப்பட்டது.
இதற்கு பதிலாக பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய அளவில் நிதி உதவி அளித்திடவும் புதிதாக பதவியேற்றிருக்கு அரசர் சல்மான் தலைமையிலான சவுதி அமைச்சரவை முடிவெடித்துள்ளது.