இஸ்ரேல் வாழ் அரேபியர்களிடம் மன்னிப்பு கோரினார் அதிபர் நெதன்யாஹு

இஸ்ரேல் வாழ் அரேபியர்களிடம் மன்னிப்பு கோரினார் அதிபர் நெதன்யாஹு
Updated on
1 min read

இஸ்ரேல் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள நெதன்யாஹு, அந்நாட்டைச் சேர்ந்த அரேபியர்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.

அவரது லிகுட் கட்சி இந்த வாரத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அந்நாட்டு தொலைக்காட்சியில் இது குறித்து பேசிய பெஞ்சமின் நெதன்யாஹு, "நான் கடந்த வாரம் பேசிய சில விஷயங்கள் அரேபிய வாழ் இஸ்ரேலியர்களுக்கு எரிச்சலுட்டுவதாக அமைந்தது. ஆனால் அது என்னுடைய நோக்கமில்லை. நான் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்" என்று கூறினார்.

உச்சகட்ட தேர்தல் வாக்கு வேட்டையின்போது, அரபு மக்கள் குறித்து இனவெறுப்புடன் நெதன்யாஹு பேசியிருந்தார்.

அபார வெற்றியடைந்துள்ள நிலையில், தான் பேசியதுக்கு மன்னிப்பு கோரியுள்ளார் நெதன்யாஹு. இதனிடையே நெதயாஹுவின் மன்னிப்பு ஏற்கக் கூடியதல்ல என்று முக்கிய இஸ்ரேலிய அரபுக் கட்சின் துணைத் தலைவர் ஐமன் ஓதே கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in