Last Updated : 07 Mar, 2015 10:22 AM

 

Published : 07 Mar 2015 10:22 AM
Last Updated : 07 Mar 2015 10:22 AM

பாகிஸ்தானில் ஹோலி கொண்டாடிய இந்துக்களின் பாதுகாப்புக்காக முஸ்லிம் மாணவர்கள் மனிதச் சங்கிலி

கராச்சியில் உள்ள சுவாமி நாராயண் கோயிலில் இந்துக்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். அவர்களுக்கு ஆதரவாகவும் பாதுகாப்புக்காகவும் முஸ்லிம் மாணவர்கள் அங்கு மனிதச் சங்கிலி அமைத்தனர்.

தேசிய மாணவர் கூட்டமைப் பைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர் கள் மனிதச் சங்கிலிக்கான ஏற்பாடுகளை செய்தனர். இதுகுறித்து அந்த அமைப்பு வெளி யிட்ட அறிக்கையில், பிற மதங் களுடன் நல்லிணக்கத்தை தழைக் கச் செய்வது, பல்வேறு மத, இன பிரிவினர் மத்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக மனிதச் சங்கிலி அமைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கூட்டமைப்பின் மூத்த நிர்வாகி பவாத் ஹசன் கூறிய தாவது:

இமாம்பர்காவில் ஷியா பிரி வினருக்கு அரவணைப்பாக நின்று நாங்கள் ஆதரவு காட்டிய போது டாக்டர் ஜெய்பால் சாப்ரியா எங்களோடு இணைந்து ஒத்துழைப்பு கொடுத்தார். பாகிஸ் தானில் வாழும் இந்துக்கள் பல் வேறு வகைகளில் இன்னல் களுக்கு ஆளாகின்றனர். அவர் களுக்கு ஆதரவாக நிற்க உறுதிபூண்டுள்ளோம்.

இந்து கோயில்கள் அவமரியா தைக்கு உள்ளாகின்றன. கட்டா யப்படுத்தி விருப்பத்துக்கு மாறாக பெண்கள் மத மாற்றம் செய்யப் படுகின்றனர். கலாசாரம், மத சம்பிரதாயங்கள் நசுக்கப்படு கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது இந்துக்களுக்கு துணை நிற்பதுதான் நியாயம். நாங்கள் மத அடிப்படைவாதிகள் அல்ல. சமூகம் மாற வேண்டும்.அந்த மாற்றத்தில் நாமும் அங்கம் வகிக்கவேண்டும்.

பிறரது உரிமைக்காக நாம் குரல் கொடுக்காவிட்டால் நாளைக்கு நமக்கும் இதே கதிதான் ஏற்படும். அப்போது நமது உரிமைக்கு குரல் கொடுக்க யாரும் வரமாட்டார்கள். இவ்வாறு ஹசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x