Published : 16 Mar 2015 11:00 AM
Last Updated : 16 Mar 2015 11:00 AM

பிரேசிலில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 52 பேர் பலி

பிரேசில் நாட்டின் மலைப் பகுதியில் பயணிகள் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 52 பேர் உயிரிழந்தனர். பிரேசிலின் பரானா பகுதியில் இருந்து ஜாயின்வில்லே பகுதிக்கு சுற்றுலா பயணிகள் பஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இந்த பஸ் ஜாயின்வில்லே அருகில் மலைப் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது ஒரு வளைவில் பஸ்ஸை திருப்பியபோது கட்டுப் பாட்டை இழந்து 1300 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதில் டிரைவர் உட்பட 52 பேர் உயிரிழந்தனர். சம்பவ பகுதிக்கு மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். ஆனால் பஸ் விழுந்த இடம் ஆபத்தான மலைச்சரிவு என்பதாலும் இரவு நேரம் என்பதாலும் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது.

இதுகுறித்து பிரேசில் போலீஸார் கூறியபோது, பஸ் விபத்தில் 8 குழந்தைகள், 24 பெண்கள் உட்பட 52 பேர் உயிரிழந்துள்ளனர், சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர். -ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x