

கோடரியால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இலங்கை அதிபர் சிறிசேனாவின் இளைய சகோதரர் பிரியந்த சிறிசேனா சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 40.
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேனா கோடரி வெட்டுத் தாக்குதலுக்குள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பலியானார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை போலீஸார் கைது செய்தனர். அவரை ஏப்ரல் 8 வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணையில் தொழில் முன்விரோதம் காரணமாக அவரது நண்பரே அவரை கோடரியால் வெட்டியது தெரியவந்துள்ளது.
இலங்கை அதிபர் சிறிசேனா சீனா சென்றவுள்ள நிலையில் அவரது சகோதரர் மரணமடைந்துள்ளார்.