

மும்பையில் 2008-ம் ஆண்டில் நடைபெற்ற தீவிரவாத தாக்குத லின் மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஜகியுர் ரஹ்மான் லக்விக்கு எதிரான முக்கிய ஆதாரத்தை பாகிஸ் தானுடன் பகிர்ந்து கொண்டுள்ள தாக அமெரிக்கா கூறியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அரசுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளது: அமெரிக்காவில் சிறைத் தண்டனை பெற்றுள்ள தீவிரவாதி டேவிட் ஹெட்லியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மும்பை தாக்குதல் சம்பவத்தை திட்டமிட்டு நடத்திய முக்கிய தீவிரவாதிகள் குறித்த தகவல்கள் கிடைத்தன.
மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்ததால், எங்களுக்கு கிடைத்த நம்பகமான பல முக்கிய தகவல்களையும், ஆதாரங்களையும் பாகிஸ்தானுக்கு அளித்துள்ளோம். முக்கியமாக தீவிரவாதி லக்விக்கு எதிரான தகவல்களையும் கொடுத்துள்ளோம். நீதிமன்ற விவகாரமாக இருப்பதால், இதுகுறித்து முழு விவரங்களையும் தெரிவிக்க முடியாது என்றார்.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் நெருக்கடியால் அவரை பொது அமைதி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு தடுப்புக் காவலில் வைத்தது.
இதனை எதிர்த்து இஸ்லாமா பாத் நீதிமன்றத்தில் லக்வி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் லக்வியை சிறையில் அடைத்திருப்பது சட்டவிரோத மானது. எனவே அவரை உடனடி யாக விடுதலை செய்ய வேண்டும் சில நாட்களுக்கு முன்பு என உத்தரவிட்டார். லக்வியின் தடுப்புக் காவலை பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் ரத்து செய்வது இது இரண்டாவது முறையாகும். எனினும் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து பாகிஸ்தான் அரசு அவரை மேலும் 30 நாட்களுக்கு காவலில் வைக்க உத்தரவிட்டது. கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய 11 தீவிரவாதிகள், நடத்திய தாக்குதல்களில் 154 பேர் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்புப் படையி னரின் பதிலடியால் 10 தீவிரவா திகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி உயிருடன் பிடிக்கப்பட்டார். அவருக்கு இந்தியாவில் மரணதண்டனை நிறை வேற்றப்பட்டது. மும்பை தாக்கு தல் சம்பவத்தில் திட்டம் வகுத்தது, தீவிரவாதிகளுக்கு தேவையான ஆயுதங்களுக்கு ஏற்பாடு செய்தது உள்ளிட்டவற்றில் லக்வி ஈடுபட்டுள்ளார்.