மத நல்லிணக்கம் ஏற்பட காந்திய கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்: சர்வதேச கல்வியாளர்கள் வலியுறுத்தல்

மத நல்லிணக்கம் ஏற்பட காந்திய கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்: சர்வதேச கல்வியாளர்கள் வலியுறுத்தல்
Updated on
1 min read

பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர் களுக்கிடையே நல்லிணக்கம் ஏற் படுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தையை ஊக்குவிப்பதற்கு காந்திய கொள்கைகளைக் கடைப் பிடிக்க வேண்டும் என்று கல்வி யாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் 21 ஆண்டுகளாக வசித்து வந்த மகாத்மா காந்தி, தனது மனைவி கஸ்துர்பா காந்தியுடன் கடந்த 1915-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி நாடு திரும்பினார். அதன்பிறகுதான் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபாடு காட்டினார். எனவே, அவர் நாடு திரும்பியதன் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக, தென் னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ் பர்க் நகரில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு சமீபத்தில் நடை பெற்றது. விட்வாட்டர்ஸ்ரண்ட் (விட்ஸ்) பல்கலைக்கழகத்தில் உள்ள இந்தியர் கல்வி மையம், பிரடோரியா மற்றும் ஜோகன்னஸ் பர்க் நகரங்களில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்கள் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தன.

இந்தியா, அமெரிக்கா, தென் னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். ‘காந்தியும் அவரது மரபும்: வழக்கறிஞர் முதல் மகாத்மா வரை’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தியின் எண்ணங்கள் எவ்வாறு பக்குவப்பட்டது’ ஆகிய தலைப்புகளில் கட்டுரை கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதுகுறித்து, இந்திய தூதர் ருச்சி கானஷ்யம் கூறும்போது, “காந்தியடிகளின் சத்யாகிரஹ இயக்கத்துக்கு அடித்தளமாக அமைந்த தென்னாப்பிரிக்காவில் இந்தக கருத்தரங்கு நடைபெற்றது பொருத்தமானது” என்றார்.

அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரம இயக்குநர் திரிதிப் சுருத் கூறும்போது, “தென்னாப்பிரிக் காவில் ‘இந்தியர் கருத்து’ என்ற பெயரில் நாளிதழில் காந்தி எழுதிய கட்டுரைகள் சத்தியா கிரஹ போராட்ட உணர்வை ஏற் படுத்த உதவியது. இந்தக் கட்டுரை கள் அனைத்தும் விரைவில் இணையதளத்தில் வெளியிடப் படும்” என்றார்.

இதுபோல், அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த அஜய் ஸ்காரியா, மொரிஷீயஸ் பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த விஜய தீலோக் உள் ளிட்டோர் காந்தியின் பல்வேறு குணநலன்கள் பற்றி பாராட்டி பேசினர்.

காந்தியின் அணுகுமுறை முதல் இனப் பாகுபாட்டை எதிர்த்தல் வரையில் அவரது ஆளுமை குறித்து இந்தக் கருத்தரங்கில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியாக உள்ள மத நல்லிணக்க பிரச்சினைக்குத் தீர்வு காண காந்திய கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் இதில் வலியுறுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in