

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது புதிதல்ல. ஆனால் தாக்கும் விதங்களும் வேகமும் தான் மாறி வருகின்றன. மதவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மை மக்களைக் குறிவைத் துத் தாக்கும்போது காவல் துறையோ, அரசு நிர்வாகமோ தடுப்பதோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதோ கிடையாது.
தாக்கப்பட்டவர் களுக்கு உதவி, நிவாரணம் ஏதும் அளிக்கப்படுவதில்லை. தாக்கிய வர்களையும் பிடித்து நீதி விசா ரணைக்கு உள்படுத்துவதில்லை.
சர்வதேச கவனத்தை இந்தத் தாக்குதல்கள் ஈர்க்கும் சமயங் களில் மட்டும் அரசு பெயரளவுக்குச் சில நடவடிக்கைகளை எடுக்கிறது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத் தில் கிறிஸ்தவர்களும் சிந்து மாநிலத்தில் இந்துக்களும் ஆங்காங்கே மிகக் குறைந்த எண்ணிக் கையில் பிரிந்து வாழ்கின்றனர்.
2 தேவாலயங்கள் தாக்கப்பட்டன
லாகூர் நகரின் யூஹனாபாத் பகுதி யில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயமும் கிறைஸ்ட் சர்ச் தேவாலயமும் கடந்த ஞாயிறன்று திட்டமிட்டு தாக்கப்பட்டன. தேவாலயம் நிரம்பி வழிந்தபோது, வெடிகுண்டுகளை மறைத்து எடுத்துக்கொண்டு 2 பேர் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களைத் தேவாலயக் காவலர்களும் போலீஸ்காரர்களும் தடுத்தபோது குண்டுகளை வெடித்துப் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டனர்.
2013-ல் பெஷாவர் நகருக்கு வெளியே கோதிகேட் என்ற இடத் தில் ஆல் செயின்ட்ஸ் தேவாலயத் தில் நடந்த இரட்டை மனித வெடிகுண்டு தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.
ஜோசப் காலனி
லாகூரின் பாதாமி பாக் பகுதியில் ஜோசப் காலனி என்ற இடத்தில் சுமார் 110-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களின் வீடுகள் ஒரே இடத்தில் உள்ளன. தாக்குதல்கள் நடந்தால் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடு வார்கள். ஜன்னல்களையும் மூடிக்கொள்வார்கள்.
பல வீடு களில் வீட்டுக்குள் ஆள் இருக்கும் அரவமே வெளியே கேட்காதபடி வானொலி உள்ளிட்ட சாதனங் களை இயக்காமல் நிறுத்தி வைப்பார்கள். வீட்டுக்கு வெளியே விளக்குகள் எரியாது. உள்ளேயும் வெளிச்சத்தைக் காண முடியாது. இளைஞர்கள், முதியவர்கள், குழந்தைகள் என்று ஒருவர் கூட வீதியில் தெரியமாட்டார்கள்.
ஜோசப் காலனிக்கு சற்றுத் தள்ளி ஷேக்காபாத் என்ற முஸ்லிம் கள் குடியிருப்பு இருக்கிறது. பொருளாதார ரீதியாகப் பார்த்தால் இரு பிரிவு மக்களுக்கு இடையேயும் அதிக வித்தியாசம் கிடையாது. மதம் மட்டுமே வேறு. ஜோசப் காலனியில் உள்ள கிறிஸ்தவரும் ஷேக்காபாத் பகுதியில் உள்ள முஸ்லிமும் நட்புடன்தான் வாழ்கின்றனர். சில வேளைகளில் சாதாரண கேலியும் கிண்டலும் திடீரென மதம் சார்ந்ததாக பார்க்கப்பட்டு கலவரத்துக்குக் காரணமாகிவிடுகிறது.
பாகிஸ்தானில் சிறுபான்மைச் சமூகத்தவர் சிறிய வேலைகளிலும் சிறிய வியாபாரங்களிலும்தான் ஈடுபடுகின்றனர். சொந்தமாக பெரிய சொத்துகளும் கிடையாது. அவர்களுடைய பகுதிகளில் அரசுப் பள்ளிக்கூடங்கள் இருப்ப தில்லை.
பள்ளிக்கூடங்கள் இருக் கும் பகுதிகளுக்குத் தங்களுடைய வயதுவந்த பெண்களையும் சிறு வர்களையும் அனுப்பத் தயங்கு கின்றனர். எனவே பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலி வேலையைப் போல எது கிடைத்தாலும் செய்கின்றனர். இதனால் தொடர்ந்து சமூக, பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் இல்லாமல் வாழ்கின்றனர்.
பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த மதவாதிகளுக்கு, எளிதான இலக்காக சிறுபான்மையோர் இருப்பதால் தங்களுடைய மதப் பற்றைக் காட்ட அடிக்கடி இப்படி அவர்களுடைய வழிபாட்டிடங் களையே குறிவைத்துவிடு கிறார்கள்.
காதல் திருமணம் செய்யும் கலப்பு மத ஜோடிகளுக்கு ஆபத்து அதிகம். இஸ்லாமியர்கள் வேறு மதத்துக்கு மாறக்கூடாது என்பது பாகிஸ்தானிய சட்டம். அப்படி யாராவது மாறினால் மரண தண்டனைதான். எனவே காதலன் கிறிஸ்தவர் ஆக இருந்தால் அந்தப் பெண் தன்னுடைய இருப் பையே மறைத்து அவர்களுடைய குடியிருப்புகளில் தலைமறைவாக வாழ நேர்கிறது.
சிறுபான்மை மக்களுடைய நிலை குறித்து மனித உரிமைகள் அமைப்பும் சர்வதேச பொது மன்னிப்பு ஸ்தாபனமும் பல அறிக்கைகளை அளித்தும் அவர்களுடைய நிலைமை மாறவில்லை என்பதையே சமீபத்திய பாகிஸ்தான் சம்பவம் உணர்த்துகிறது.