Published : 12 Mar 2015 09:49 AM
Last Updated : 12 Mar 2015 09:49 AM

பிபிசி-யில் தயாரிப்பாளரை தாக்கிய நிகழ்ச்சி தொகுப்பாளர் சஸ்பெண்ட்: இனவெறி கருத்துகளை தெரிவித்தவர்

தயாரிப்பாளரை தாக்கியதால் பிபிசி-யில் பிரபலமான ‘டாப் கியர்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஜெரமி கிளார்க்சனை (54) பிபிசி சஸ்பெண்ட் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாரையும் சஸ்பெண்ட் செய்யவில்லை. வாகனம் ஓட்டுதல் தொடர்பான டாப் கியர் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகாது. இந்த நேரத்தில் இதுகுறித்து வேறு எதுவும் தெரிவிக்க முடியாது” என்று கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், பிபிசி செய்திப் பிரிவின் சிறப்பு செய்தியாளர் லூசி மன்னிங் கூறும்போது, “கடந்த வாரம் நடைபெற்ற படப் பிடிப்பின்போது நிகழ்ச்சி தயாரிப் பாளரை கிளார்க்சன் தாக்கியுள் ளார். இந்த சம்பவம் குறித்து நிர்வாகத்துக்கு திங்கள்கிழமை தான் தெரியவந்துள்ளது.

இதை யடுத்து அவரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்த இரண்டு வாரத்துக்கு டாப் கியர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மற்றும் இறுதி எபிசோடும் ஒளிபரப்பாகாது என்று தெரிகிறது” என்றார்.

கிளார்க்சன் இதற்கு முன்பும் இந்தியர்கள், தென்கிழக்கு ஆசியர்கள், ஆப்ரிக்கர்களுக்கு எதிராக இனவெறியைத் தூண்டும் வகையில் பல தடவை சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் குறித்து கிண்டல் செய்து சர்ச்சையில் சிக்கி உள்ளார். ஆனால் இதற் காக பிபிசி இவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த ஆண்டு மே மாதம் படப்பிடிப்பின்போது ஊழியர்களை இனவெறியைத் தூண்டும் வகையில் பேசியதாக கிளார்க்சன் மீது புகார் எழுந்தது. இதையடுத்து நிர்வாகம் அவரை எச்சரிக்கை செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x