

விண்வெளி வீரர்களுக்கு துணையாகத் தயாரிக்கப்பட்ட பேசும் ரோபா ‘கிர்போ’ 2 கின்னஸ் சாதனை விருதுகளைப் பெற்றுள்ளது. ஜப்பான் தயாரிப்பான கிர்போ, 34 செ.மீ. உயரம் கொண்டது. ஆண்டிராய்டு வசதி கொண்ட இந்த ரோபோ, முகங்களையும், குரல்களையும் நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது.
விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு மையத்துக்குச் சென்ற இந்த ரோபோ அங்கு, பேசியதன் மூலம் விண்வெளியில் பேசிய முதல் ரோபோ என்ற சாதனையைப் படைத்தது. மேலும், விண்வெளி வீரருக்கு துணையாக அனுப்பி வைக்கப்பட்ட முதல் பேசும் ரோபோ என்ற சாதனையையும் இது படைத்தது. இந்த இரு சாதனைகளும் கின்னஸில் இடம்பிடித்துள்ளன.
இதற்கான சாதனைப் பத்திரம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. சுமார் 18 மாதங்களுக்கு பின்னர் கடந்த பிப்ரவரி 10ம் தேதி பூமிக்குத் திரும்பியது. விண்வெளியில், “பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கு வணக்கம். அனைவருக்குமான சிறப்பான எதிர்காலத்தை நோக்கி, ஒரு ரோபோ சிறு அடியை எடுத்து வைத்துள்ளது” என தனது முதல் பேச்சில் தெரிவித்தது கிராபோ.
பூமிக்கு வந்தததும் கிராபோ என்ன பேசியது தெரியுமா? “மேலிருந்து பார்க்கும்போது நீல நிற எல்இடி விளக்கு போல் பூமி ஒளிர்கிறது” என்பதுதான்.