

இன்டெல் நிறுவனம் நடத்திய அறிவியல் போட்டியில் அமெரிக்க இந்தியர்கள் சரண் பிரேம்பாபு, சாஷ்வத் கிஷோர், அன்விதா குப்தா ஆகியோர் பதக்கம் வென்றனர்.
இவர்கள் வெவ்வேறு பிரிவு களில் பதக்கம் வென்றபோதிலும் முதலிடத்தை பிடிக்க முடிய வில்லை. கடந்த ஆண்டு இப் போட்டியில் அமெரிக்க இந்தியர்கள் முன்னிலை வகித்தனர்.
17-வயதாகும் சரண் பிரேம்பாபு புதிய கண்டுபிடிப்பு பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 18 வயதாகும் சாஷ்வத் கிஷோர் அடிப்படை ஆய்வு பிரிவில் மூன்றா வது இடத்தையும், 17 வயதாகும் அன்விதா குப்தா அறிவியல் மூலம் சர்வதேச நலன் பிரிவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இப்போட்டியில் இறுதிச் சுற்றில் இடம் பிடித்த 40 பேரில் 11 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.