Published : 28 Feb 2015 08:45 AM
Last Updated : 28 Feb 2015 08:45 AM

இவரைத் தெரியுமா?- உஷா சங்வான்

$ இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்.ஐ.சி) நிர்வாக இயக்குநர். இந்த பொறுப்புக்கு வந்திருக்கும் முதல் பெண் இவர்தான். இதற்கு முன்பு எல்.ஐ.சியின் செயல் இயக்குநராக இருந்தார்.

$ 1981-ம் ஆண்டு எல்.ஐ.சி யில் நேரடியாக இணைந் தவர். மார்க்கெட்டிங், செயல் பாடுகள், மனிதவளம், சர்வ தேச செயல்பாடு, ஹவுசிங் பைனான்ஸ் உள்ளிட்ட அனைத்து முக்கியமான பிரிவுகளிலும் பணிபுரிந்தவர்.

$ எல்.ஐ.சி. நிறுவனத்தை சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் இணைத்தது இவர்தான்.

$ பொருளாதாரம் மற்றும் மனிதவளப் பிரிவில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

$ ஆக்ஸிஸ் வங்கியின் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார். எல்.ஐ.சியின் துணை நிறுவனமான எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர். இந்த நிறுவனத்துக்காக 2.98 டாலர் தொகையை ஜிடிஆர் மூலமாக திரட்டினார்.

$ சமீபத்தில் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட ஆசியாவின் அதிகாரம் மிக்க 50 பெண்கள் (பிஸினஸ்) பட்டியலில் இவரும் இடம்பிடித்திருக்கிறார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x