

மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான முகமது நஷீத் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செயப்பட்டுள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு முகமது நஷீத் அதிபராக இருந்தபோது, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா முகமது கைது தொடர்பான வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். இது குறித்த செய்தியினை ஏ.பி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உள்நாட்டுத் தொலைக்காட்சி நிலையங்களும் அவர் கைது செய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பியது. ஆனால் இந்த கைதுக்கான உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த 2012-ஆம் நீதிபதி அப்துல்லாவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதைய அதிபராக இருந்த முகமது நஷீதுக்கு எதிராக பெரும் அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து 2013-ல் நடந்த அதிபர் தேர்தலில் முகமது நஷீத் தோல்வியடைந்த நிலையில் மாலத்தீவின் ஆட்சிப் பொறுப்பை யாமீன் அப்துல் கயூம் பிடித்தார்.