

ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கான முதன்மைச் செய்தியாளர் மரியா கோல்வினாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மரியா கோல்வினாவின் அவரது அலுவலகத்தில் மயங்கிய நிலையில் இருந்ததாகவும், அவரை மருத்துவமனையில் அனுமதித்தப்போது அவர் இறந்ததை பிம்ஸ் மருத்துவமனை உறுதி செய்ததாகவும் இஸ்லாமாபாதின் எஃப்-8 காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மரியா கோல்வினாவின் இறப்புக்கான காரணம் தெரியவில்லை. இஸ்லாமாபாதைச் சேர்ந்தவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிரிவுக்கான முதன்மைச் செய்தியாளராக பணியாற்றினார்.
பிம்ஸ் மருத்துமனை மருத்துவர்களால் மரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் ரஷ்ய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரியவிக்கப்பட்டுள்ளது. அவரது இறப்புக்கான காரணம் குறித்த தகவல் எதுவும் இல்லை.