விடுதலைப்புலிகள் தலைவர் குமரன் பத்மநாதன் நாட்டை விட்டு வெளியேற தடை

விடுதலைப்புலிகள் தலைவர் குமரன் பத்மநாதன் நாட்டை விட்டு வெளியேற தடை
Updated on
1 min read

விடுதலைப்புலிகளின் முன்னணித் தலைவரான குமரன் பத்மநாதன் இலங்கையை விட்டு வெளியேற தடை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபாகரனுக்குப் பிறகு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவராக குமரன் பத்மநாதன் பொறுப்பேற்றார்.

குமரன் பத்மநாதனை கைது செய்ய வேண்டும் என்று இலங்கை மார்க்சிய கட்சியான ஜனதா விமுக்தி பெரமூனா நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது.

குமரன் பத்மநாதன் மலேசியாவில் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டு வரப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக இந்தியாவினால் தேடப்பட்டு வருபவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறைந்த அளவிலான குற்றங்களுக்கு சில விடுதலைப்புலிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளித்த ராஜபக்ச அரசு, குமரன் பத்மநாதனை மன்னித்ததையடுத்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.

தற்போது ராஜபக்ச தோல்வியடைந்ததையடுத்து இந்த விவகாரத்தை மீண்டும் கிளப்பியது ஜனதா விமுக்தி பெரமூனா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in