

பாகிஸ்தானில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 5 பேர் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.
அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பூமிக்கு அடியே 28.9 கிமீ. ஆழத்தில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் இரண்டுமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 5 பேர் காயமடைந்ததாகவும் அதில் ஒருவரது நிலை மோசமானதாக உள்ளதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் இஸ்லாமாபாத் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் உணரப்பட்டது.