அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி ரகசிய கடிதம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி ரகசிய கடிதம்
Updated on
1 min read

கடந்த அக்டோபரில் அமெரிக்க அதிபர் ஒபாமா அனுப்பிய கடிதத்திற்கு பதில் அளிக்கும் விதமாக ஈரான் தலைவர் அயத்துல்லா காமெனி ரகசிய கடிதம் எழுதியுள்ளதாக வால் ஸ்ட்ரீட் பத்திரிகை கூறியுள்ளது.

இது குறித்து ஈரான் நாட்டு தூதர் ஒருவரை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை எதிர்த்துப் போராட ஈரானின் ஒத்துழைப்பு கோரியுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கடிதத்திற்கு காமெனி பதில் அளித்துள்ளார்.

அணு ஆயுத விவகாரத்தில் ஒத்துழைப்பு நல்கினால் ஐ.எஸ். அமைப்பை ஒடுக்கலாம் என்று ஒபாமா அதில் அறிவுறுத்தியிருந்ததாகத் தெரிகிறது.

இதற்கு ரகசிய கடிதம் அனுப்பியுள்ள ஈரான் தலைவர் அயத்துல்லா காமெனி, மரியாதை நிமித்தமாக பதில் அனுப்பியுள்ளதாகவும் ஐ.எஸ். பற்றியோ, அணு ஒத்துழைப்பு பற்றியோ பெரிதாக அதில் எதுவும் குறிப்பிடாமல் கடிதம் எழுதியுள்ளதாகவும் அந்த தூதரக அதிகாரி கூறியதாக இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வெள்ளை மாளிகையும், ஐ.நா.வில் உள்ள ஈரான் மிஷனும் இந்தத் தகவலை உறுதி செய்ய மறுத்துள்ளது.

ஈரானின் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று மேற்கு நாடுகள் சந்தேகிக்கும் நிலையில் ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டால் அது மேற்கு நாடுகளின் கவலையை விடுவிக்கும் என்று கருதப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில்தான் அயத்துல்லா காமெனி அதிபர் ஒபாமாவுக்கு ரகசிய கடிதம் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடிதத்தின் முழு விபரம் வெளியாகவில்லை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in