உலக அளவில் 2013-ல் இருந்து வங்கிகளில் ரூ..6,200 கோடி சைபர் திருட்டு

உலக அளவில் 2013-ல் இருந்து வங்கிகளில் ரூ..6,200 கோடி சைபர் திருட்டு
Updated on
1 min read

உலக அளவில் 2013-ல் இருந்து இப்போது வரை வங்கிகளில் இருந்து சைபர் கொள்ளையர்களால் சுமார் 6220 கோடி ரூபாய் (1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) தொகை திருடப்பட்டுள்ளது என்று பிரபல மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான 'கேஸ்பர் ஸ்கை' தெரிவித்துள்ளது.

இன்னும் இந்தத் திருட்டு தொடர்ந்து நடந்து வருவதாக, பிபிசியிடம் கூறியுள்ள அந்நிறுவனத்தின் இன்டர்போல் டிஜிட்டல் குற்றப் பிரிவு இயக்குனர் சஞ்சய் விர்மானி கூறும்போது, "ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி, சீனா, உக்ரைன், கனடா உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த வங்களில் சைபர் திருட்டு நடக்கின்றன. இதனை நாங்கள் இன்டர்போல் மற்றும் யூரோபோலுடன் இணந்து கண்காணித்து வருகிறோம்.

பாதுகாப்பற்ற கம்ப்யூட்டர்களை குறிவைத்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களில், இந்தத் திருட்டு பெருமளவில் நடக்கின்றன. சைபர் கிரிமினல் கும்பல்கள் அதிகளவில் ரஷ்யா, உக்ரைன் மற்றும் சீனாவில் இருந்தே இயங்குகின்றனர்.

அபாயகர பயனாளிகள் நேரடியாக வங்கிகளைக் குறிவைத்து திருடுகின்றனர். கணக்குகளுக்குரிய பயனாளிகளை அவர்கள் குறிவைப்பதில்லை.

கம்ப்யூட்டர்களின் நெட்வொர்க்களை குறிவைத்து தாக்கும் 'கர்பெனாக்' என்ற வைரஸை அனுப்புவதன் மூலம் சைபர் கிரிமினல் கும்பல்கள் தங்களது தேவையைப் பூர்த்தி செய்கின்றனர்.

இந்த 'கர்பெனாக்' வைரஸ் கம்ப்யூட்டர் பயனாளியின் விவரங்களை வீடியோ கண்காணிப்பு வழியாக அனைத்தையும் பார்க்கவும் அவற்றை பதிவு செய்யவும் வழி செய்கிறது.

சில நேரங்களில் தேர்வு செய்யப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றவும், வெவ்வேறு நேரத்தில் பணத்தை பரிமாற்றம் செய்யும் கட்டளைகளை நிறைவேற்ற செய்கிறது.

இரண்டு அல்லது நான்கு மாத இடைவெளியில் நடக்கும் இத்திருட்டுச் சம்பவத்தில் சராசரியாக ஒருமுறைக்கு சுமார் ரூ.62 கோடி திருடப்படுகிறது. இந்தத் திருட்டு மிகவும் நேர்த்தியான தொழில்நுட்ப வழியிலும் திறமையான முறையிலும் நடத்தப்படுகிறது" என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in