அமெரிக்காவில் டர்பன் அணிந்து பணியாற்ற சீக்கிய போலீஸ் அதிகாரிக்கு அனுமதி

அமெரிக்காவில் டர்பன் அணிந்து பணியாற்ற சீக்கிய போலீஸ் அதிகாரிக்கு அனுமதி
Updated on
1 min read

அமெரிக்காவில் முதல்முறையாக டர்பன் அணிந்து பணியாற்ற சீக்கிய போலீஸ் அதிகாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ராணுவம், போலீஸில் சீக்கிய இளைஞர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். அந்த நாட்டு சட்டப் படி ராணுவ, போலீஸ் பணியில் இருப்பவர்கள் தாடி, தலைப் பாகை அணிய தடை விதிக்கப் பட்டுள்ளது.

எனினும் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று ராணுவ விதிகளில் தளர்வு செய்யப் பட்டு சீக்கியர்கள் டர்பன் அணிய அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க போலீஸ் துறையில் முதல்முறை யாக சீக்கிய போலீஸ் அதிகாரி ஒருவர் டர்பன் அணிந்து பணி யாற்ற அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

டெக்சாஸ் மாகாணம் ஹாரிஸ் கவுன்டி பகுதியில் ரோந்து பணி போலீஸ் அதிகாரியாக சந்தீப் சிங் (30) பணியாற்றி வருகிறார். சீக்கிய பாரம்பரியபடி டர்பன், தாடி வைத்துக் கொள்ள அவர் அனுமதி கோரினார். அவரது கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அமெரிக்க போலீஸ் துறையில் முதல்முறை யாக டர்பன் அணிந்து பணியாற்ற சந்தீப் சிங்குக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in