பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்
Updated on
1 min read

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் நேற்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 5 பேர் காயமடைந்தனர்.

இஸ்லாமாபாத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ஹசார்சா பகுதியில், பூமிக்கு அடியே 28.9 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவாகியது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து 2 முறை பிந்தைய அதிர்வும் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.

இந்நிலையில் இந்த நில நடுக்கத்தில் 5 பேர் காயம் அடைந்ததாகவும், உடமைகள் சிலவற்றுக்கு சேதம் ஏற்பட்ட தாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன.

இந்த நிலநடுக்கம், தலைநகர் இஸ்லாமபாத் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதிகளி லும் உணரப்பட்டது. கடந்த 2005-ம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்துக்கு 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத் தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in