

மருந்துகளுக்கு கட்டுப்படாத மலேரியா காய்ச்சல் இந்திய, மியான்மர் எல்லையில் பரவுவ தாக விஞ்ஞானிகள் தெரிவித்துள் ளனர்.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல் கலைக்கழக விஞ்ஞானிகள் மியான்மர், தாய்லாந்து, வங்க தேசம் ஆகிய நாடுகளில் 2013, 2014-ம் ஆண்டுகளில் மலேரியா வால் பாதிக்கப்பட்ட 940 பேரின் ரத்தத்தை சேகரித்து ஆய்வு நடத்தினர்.
இதில் 371 பேர், மருந்து களுக்கு கட்டுப்படாத மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப் பது தெரியவந்தது. இந்த வகை காய்ச்சல் மியான்மரின் ஹோலோலின், சகாயிங் பகுதிகளில் பரவி வருகிறது.
இப்பகுதிகள் இந்திய எல்லை யில் இருந்து 25 கி.மீட்டர் தொலை வில் உள்ளன. எனவே ஆபத்தான இந்த மலேரியா காய்ச்சல் இந்தியாவிலும் பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.