

சிரியாவில் இருந்து 90 பேரை ஐ.எஸ்.அமைப்பினர் கடத்திச் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் கிறிஸ்தவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டுள்ள `மனித உரிமைக்கான சிரியா ஆய்வகம்' அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "குர்து இன மக்கள் வசித்து வரும் ஹசாகா நகரத்தில் கிறிஸ்தவ கிராமங்களும் உள்ளன. அங்கு வாழ்ந்து வரும் கிறிஸ்தவர்களில் பலர் ஐ.எஸ்.அமைப்பினரால் கடத்திச் செல்லப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.