

‘குரோச்சிங் டைகர் ஹிடன் டிராகன்’ படத்தின் மூலம் பிரபலமடைந்த சீன நடிகை ஜியாங் ஜியியின் திருமண நிச்சயதார்த்தம் வித்தியாசமான முறையில் நடைபெற்றது.
சீனாவை சேர்ந்த நடிகை ஜியாங் இதுவரை 30-க்கும் மேற் பட்ட சீன திரைப்படம் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். அண்மையில் அவர் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போது அவரது நண்பரும் ராக் பாடகருமான வாங் பெங் (43) வித்தியமாசமான முறையில் தனது காதலை வெளிப்படுத்தினார்.
பிறந்தநாள் விழாவில் திடீரென ஒரு பொம்மை விமானம் பறந்து வந்தது. அதில் 9.15 கேரட் வைர மோதிரம் ஜொலித்தது. அங்கிருந்த பாடகர் வாங் பெங், நடிகை ஜியாங் முன்பு மண்டியிட்டு தனது திருமண விருப்பத்தை வெளிப்படுத்தினார். இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிய ஜியாங் அடுத்த நொடியே சம்மதம் கூறினார். பிறந்தநாள் விழாவோடு ஜியாங்-வாங்கின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கடந்த 2008-ம் ஆண்டில் அமெரிக்க தொழிலதிபர் ஒருவரை ஜியாங் திருமணம் செய்தார். இருவரும் 2010-ம் ஆண்டில் பிரிந்துவிட்டனர்.