Last Updated : 15 Feb, 2015 12:14 PM

 

Published : 15 Feb 2015 12:14 PM
Last Updated : 15 Feb 2015 12:14 PM

நல்லிணக்கம் ஏற்படுத்த அவகாசம் கொடுங்கள்: தமிழர்களுக்கு இலங்கை அதிபர் வேண்டுகோள்

மக்களிடையே ஒற்றுமையும் நல்லி ணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு தமிழர்கள் போதிய அவகாசம் கொடுக்க வேண்டும் என்று இலங்கை புதிய அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் வெளிநாட்டுத் தூதர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: நாட்டு மக்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளோம். இருப்பினும் எனது அரசு இப்போதுதான் புதிதாக பதவியேற்றுள்ளது. எனவே இந்த லட்சியத்தை நிறைவேற்ற போதிய அவகாசம் தரப்படவேண்டும்.

வலுவான சகோதரத்துவ உணர்வுடன் அனைத்து சமூகத்தின ரும் வாழ்வதற்கு சரியான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

ஜனவரி 8-ம்தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன்மூலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் சிறுபான்மையினரின் நிலங்களை விடுவித்துள்ளோம். இது தமிழர்கள் மத்தியில் காணப் படும் கொந்தளிப்பை குறைப் பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

இவ்வாறு சிறிசேனா தெரி வித்தார்.

அதிபர் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் சிறிசேனாவுக்கு பெருவாரியாக ஆதரவு கொடுத்தனர். முந்தைய அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு புத்தமதத்தினர் ஆதரவு கொடுத்துவந்தனர்.

இதனிடையே, நல்லிணக்க நடவடிக்கைகளை எடுப்பதில் புதிய அரசு நிதானம் காட்டுவதாக விடுதலைப்புலிகள் ஆதரவு தமிழர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் சிறிசேனா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x