எரிமலை சீற்றம்: தெற்கு கவுத்தமாலாவில் எச்சரிக்கை

எரிமலை சீற்றம்: தெற்கு கவுத்தமாலாவில் எச்சரிக்கை
Updated on
1 min read

கவுத்தமாலாவில் உள்ள ஃபியுகோ எரிமலையில் சீற்றம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து எரிபாறைகள் மற்றும் சாம்பல் புகை வெளியேறி வருகிறது.

இத்தகவலை தெரிவித்த கவுத்தமாலா தேசிய பேரிடர் முன் தயாரிப்பு அதிகாரி, தெற்கு கவுதமாலாவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார். ஆனால் இதுவரை யாரையும் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தவில்லை.

ஆன்டிகுவா அருகே வசிக்கும் கரீனா லோபஸ் என்பவர் கூறுகையில், சாம்பல் புகை மற்றும் லேசான தூறலினால் எதுவும் தெரியவில்லை என்றும், எரிமலை சீற்றம் தொடர்ந்து இருந்து வந்தது என்றும் தெரிவித்தார்.

தீயணைப்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு பற்றிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த எரிமலை எஸ்குவிந்தலா, சகடேபெகுவெஸ், சிமல்டினாங்கோ ஆகிய மாநிலங்களின் எல்லைப்பகுதியில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,763 மீட்டர் உயரத்தில் இந்த எரிமலை உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in