

பிரிட்டன் வங்கியான எச்.எஸ்.பி.சி. வங்கி தனது சுவிஸ் வங்கிக்கிளையைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளது.
1999ஆம் ஆண்டு வாங்கிய பிறகே சுவிஸ் வங்கியை முழுதும் ஒருங்கிணைப்பு செய்யவில்லை. அதனாலான விளைவுகளுக்கும் கட்டுப்பாடுகள் செய்யத் தவறியதற்கும் பொறுப்பு ஏற்பதாக அந்த வங்கி நேற்று ஒப்புக் கொண்டுள்ளது.
வரி ஏய்ப்பாளர்கள், சட்டத்தில் இருந்து தப்பி இருப்பதற்கான சில ஏற்பாடுகளை எச்.எஸ்.பி.சி. வங்கியின் சுவிஸ் கிளை வழங்கியதாகவும், பணக்கார வாடிக்கையாளர்கள் வரிகளை கட்டாமல் இருக்க என்னன்ன செய்ய வேண்டும் என்பதையும், கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களை மறைக்கவும் எச்.எஸ்.பி.சி. வங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவியதாகவும் ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்து வெளிவந்தபடி இருந்ததையடுத்து, அந்த வங்கி, "கடந்த கால ஒத்துழைப்புகளுக்கும் (வரி ஏய்ப்பு செய்ய உதவியது) கட்டுப்பாட்டு தவறல்களையும் ஏற்றுக் கொள்கிறோம்." என்று எச்.எஸ்.பி.சி. வங்கி நேற்று ஒப்புக் கொண்டது.
தி கார்டியன் மற்றும் சில ஊடகங்கள் மூலம் எச்.எஸ்.பி.சி. வங்கியின் இத்தகைய செயல்பாடுகள் அவர்களுக்கு கிடைத்த ஆவணங்கள் மூலம் அம்பலமாகியது.
மொத்தம் 203 நாடுகளிலிருந்து 100,000 எச்.எஸ்.பி.சி “வாடிக்கையாளர்கள்”, இவர்களின் கணக்கு விவரங்கள்.( மொத்தத் தொகை 102.05 பில்லியன் டாலர்கள், காலக்கட்டம் 2005-07)
1999-இல் எச்.எஸ்.பி.சி வங்கி சுவிஸ் தனியார் வங்கியை வாங்கியது.
2007: எச்.எஸ்.பி.சி. வங்கியின் சுவிஸ் கிளையின் ஐ.டி. நிபுணர் ஹெர்வ் ஃபால்சியானி வாடிக்கையாளர்கள் கோப்புகளை ஹேக் செய்தார். பிறகு பிரான்ஸில் இவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் வாடிக்கையாளர்கள் பெயர்கள் மற்றும் கணக்கு விவரங்கள் சிக்கின. இவர் பிற்பாடு தான் ஊழல்களை அம்பலப்படுத்துவதற்காகவெ இதனைச் செய்ததாக தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
2010: அப்போதைய பிரான்ஸ் அமைச்சர் கிறிஸ்டீன் லகார்டே ரகசியமான ‘லகார்டே பட்டியல்’ ஒன்றை வெளியிட்டார். இதில் சுவிஸ் வங்கியில் ரகசிய கணக்கு வைத்திருப்பவர்களின் 2000 பேர் கொண்ட பட்டியல் அம்பலமானது, இதனால் ஏகப்பட்ட கைதுகள் தொடர்ந்தது.
தி கார்டியன் தனது அறிக்கையில், எச்.எஸ்.பி.சி.யின் சுவிஸ் வங்கிக் கிளை தங்கள் வாடிக்கையாளர்களை அயல்நாட்டு பணங்களை வங்கிகளிலிருந்து எடுக்க அனுமதித்துள்ளது. இந்தப் பணத்திற்கு சுவிஸ் நாட்டில் எந்தவிதப் பயனும் இல்லை. மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் உள்நாட்டில் ரகசிய கணக்கை மறைப்பதற்கும், செல்வந்த வாடிக்கையாளர்கள் ஐரோப்பிய வரிகளை ஏய்க்கவும் ஏகப்பட்ட கவர்ச்சிகரத் திட்டங்களை எச்.எஸ்.பி.சி. வங்கி அறிவித்தது. என்று கூறியுள்ளது. மேலும் ஊழல்வாதிகளுக்கும், சர்வதேச கிரிமினல்களுக்கும் எச்.எஸ்.பி.சி. சுவிஸ் வங்கி கருப்புப் பணம் பதுக்க கணக்கு தொடங்கி கொடுத்துள்ளதும் தி கார்டியன் உள்ளிட்ட பத்திரிகைகளுக்குக் கிடைத்த ஆவணங்கள் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.