

இந்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு வரும்போது இருநாடுகளிடையே தீர்த்தப்படாமல் உள்ள பிரச்சி னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித் துள்ளது.
எனினும் ஜெய்சங்கர், பாகிஸ் தானுக்கு செல்லும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தஸ்னீம் அஸ்லாம் இஸ்லாமாபாதில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சு நடத்த வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. இதில் இருந்து பின்வாங்க மாட்டோம். இந்தியாவில் படகு நடுக்கடலில் எரிந்தது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது பாகிஸ்தானுக்கு சொந்த மானதில்லை என்பது ஏற்கெனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை இந்த விஷயத்தில் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவதன் மூலம் அந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்பது தெரியவருகிறது.
2007-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையிலான சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்ததில் 68 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்கள்.
எனவே அந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர் விசாரணை விவரங்களை பாகிஸ்தானுடன் இந்தியா பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.