

தனது முதல் அமெரிக்கக பயணத்தை மேற்கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து சீன பத்திரிகைக்கு அமெரிக்காவுக்கான தூதர் சியூ தியாங்கி கூறும்போது, "அமெரிக்க வெளியுறவு அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்படுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பயண தேதி முடிவாகவில்லை" என்றார்.
முன்னதாக சீன அதிபர் ஜி ஜிங்பிங் மற்றும் ஜப்பான் அதிபர் ஷினோஸ் அபே ஆகியோருக்கு அமெரிக்கா வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் சூசன் ரைஸ் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.