Published : 07 Apr 2014 12:00 AM
Last Updated : 07 Apr 2014 12:00 AM

செல்வாக்குமிக்க 100 ஆசியர்கள் பட்டியலில் சோனியா இரண்டாமிடம்; ரஜினிக்கு 66-வது இடம்

2014-ம் ஆண்டில் ஆசிய நாடுகளில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரண்டாமிடம் பெற்றுள்ளார். தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் 66வது இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்தின் பிரபல தொழிலதிபர் பால் சகூ நிறுவிய 'ஆசியன் அவார்ட்ஸ்' என்ற அமைப்பு இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

'ஆசியன் அவார்ட்ஸ்' அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தலைசிறந்த 100 ஆசியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் 63-வது இடத்திலும், தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் 66வது இடத்திலும் உள்ளனர்.

பட்டியலில் முதலிடத்தை சீன அதிபர் சீ ஜின்பிங்கும் இரண்டாமிடத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிடித்துள்ளனர். பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி 4-வது இடத்தையும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 5-வது இடத்தையும் பிரதமர் மன்மோகன் சிங் 6-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இவர்கள் தவிர நிதியமைச்சர் ப.சிதம்பரம் (11வது இடம்), குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (19), தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி (21), லஷ்மி மிட்டல் (36), மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (44), சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே (46), பொருளியல் அறிஞர் அமர்த்திய சென் (52), நடிகர் அமீர்கான் (68), கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் (76), நடிகை ஐஸ்வர்யா ராய் (84), நடிகர் சல்மான்கான் (98), கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி (99) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

ராஜபக்சேவுக்கு 34-வது இடம்

இந்தப் பட்டியலில் ஐ.நா. தலைவர் பான் கி மூன் 8வது இடத்திலும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 22 வது இடத்திலும், இலங்கை அதிபர் ராஜபக்சே 34-வது இடத்திலும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x