

ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு புதியவர்களை ஈர்ப்பதற்காக மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தை முறியடிக்கச் செய்யும் வகையில், அமெரிக்கா புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது.
தனது அமைப்புக்கு உலகம் முழு வதிலும் இருந்து புதியவர்களை ஈர்ப்பதற்காக பிரபல சமூகவலை தளங்களான பேஸ்புக், ட்விட்டர் போன்ற பல வழிகளையும் ஐ.எஸ்., கையாள்கிறது.
இவ்வாறு இணையம் மூல மாக ஐ.எஸ்.மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தை ஒடுக்க, அமெரிக்கா புதிய முயற்சி ஒன்றை மேற்கொள் ளத் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவில் 'தீவிரவாதத் துக்கு எதிரான தகவல் மையம்' ஒன்று ஏற்கெனவே செயல்பட்டு வரு கிறது. அந்த மையத்தை மேலும் சற்று விரிவுபடுத்துவதன் மூலம் ஐ.எஸ். அமைப்பின் பிரச்சாரத்தை நீர்த்துப் போகச் செய்ய முடியும் என்று அமெரிக்கா கருதுகிறது.
இந்த மையத்தில், ‘தகவல் ஒருங்கிணைப்பு மையம்' ஒன்றை அமெரிக்கா ஏற்படுத்த உள்ளது. இதில் 30 பேர் பணிபுரிவார்கள். இந்த மையம் அமெரிக்க அரசின் கீழ் உள்ள துறைகள், தூதரகங்கள், ஊடக மையங்கள் என 350க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை ஒருங்கிணைக்கும்.
அதன் மூலம் ஐ.எஸ்.அமைப்புக்கு எதிராகப் பணி யாற்றி வரும் செயற்பாட்டாளர்கள், இஸ்லாமிய தலைவர்கள், கல்வியாளர்கள், மதத்தலைவர்கள் போன்றவர்கள் இடும் செய்திகளையும் ஒருங்கிணைத்து தனது கணக்குகளில் பதிவிடும்.
ஐ.எஸ்.அமைப்பும் அவர்களது ஆதரவாளர்களும் நாளொன்றுக்கு 90,000 ட்விட்டர் பதிவுகளை இடு கிறார்கள். இந்த அளவுக்கு அல்லது இதற்கு மேலும் ஐ.எஸ்.அமைப் புக்கு எதிராக செய்திகளை வெளி யிட இந்த மையம் முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.