Last Updated : 09 Feb, 2015 06:20 PM

 

Published : 09 Feb 2015 06:20 PM
Last Updated : 09 Feb 2015 06:20 PM

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி அளிக்கவில்லை: சவுதி அரேபியா

பாகிஸ்தானில் தீவிரவாத எண்ணத்தோடு இருப்பவர்களுக்கு நிதி உதவி அளிக்கவில்லை என்று சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்த சவுதி அரேபிய தூதரக அறிக்கையை பாகிஸ்தானின் டான் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், "பாகிஸ்தானில் தீவிரவாத எண்ணத்தோடு இருப்பவர்களை மேலும் தூண்டிவிடும் நோக்கத்தோடு சவுதி அரேபிய அரசு நிதி உதவி அளிப்பதாக சில பத்திரிகைகள் சமீப காலமாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

பாகிஸ்தானில் நடக்கும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் கருத்தரங்குகளுக்கு நிதியுதவி கேட்டு சவுதி அரசுக்கு விண்ணப்பம் வருவது வழக்கம். ஆனால் அதனை தூதரகத்திடம் அளித்து நிகழ்ச்சியின் உண்மை நிலைக் குறித்து அறியாமல் நிதி ஒதுக்கப்படுவதில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு நிதி பட்டுவாடா செய்து அவர்களிடையே உறுதியற்ற தன்மையை உருவாக்க சவுதி அரசு பணியாற்றி வருவதாகவும், பாகிஸ்தானுக்குள் சவுதி அரசு பணப் பட்டுவாடா செய்து வருவதை நிறுத்தி அவர்களது செல்வாக்கை குறைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் மாகாண ஒருங்கிணைப்பு அமைச்சர் ரியாஸ் ஹுசைன் கூறியிருந்த நிலையில் இந்த விளக்கத்தை சவுதி தூதரகம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x