ஒரே மாதத்தில் 3 முறை லாட்டரியில் வென்ற தம்பதி

ஒரே மாதத்தில் 3 முறை லாட்டரியில் வென்ற தம்பதி
Updated on
1 min read

அமெரிக்காவில் விர்ஜீனியா மாகாணம் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு ஒரே மாதத்தில் மூன்று முறை அதிர்ஷ்டம் கதவைத் தட்டியுள்ளது.

கால்வின் மற்றும் ஜாடெரா ஸ்பென்ஸர் தம்பதிக்கு கடந்த வாரத்தில் சுரண்டல் லாட்டரி விளையாட்டில் 10 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 60 கோடி) கிடைத்துள்ளது. இவர்களுக்கு லாட்டரியில் பரிசு கிடைப்பது கடந்த ஒரு மாதத்தில் இது 3-வது முறையாகும்.

கடந்த மார்ச் 12-ம் தேதி பவர்பால் குலுக்கல் எனும் சூதாட்டத்தில் சுமார் ரூ. 60 கோடி கிடைத்தது. அதேபோன்று கடந்த மார்ச் 26-ம் தேதி, விர்ஜீனியா லாட்டரியில் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.30 லட்சம்) பரிசு கிடைத்தது. இப்படித் தொடர்ந்து அதிர்ஷ்ட மழை கொட்டுவதால் இத்தம்பதி திக்குமுக்காடிப் போயு ள்ளது.

ஆனால், “இத்துடன் நாங்கள் நின்று விடப்போவதில்லை” என இத்தம்பதி மேலும் பரிசுக் கூப்பன்களையும், சூதாட்ட விளையாட் டுகளிலும் ஈடுபட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in