

சிரியாவில் அல்-காய்தா தீவிரவாதி களால் கடத்தப்பட்ட இத்தாலியைச் சேர்ந்த 2 பெண்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இத்தாலியைச் சேர்ந்த கிரேட்டா (20), வானிசா (21) ஆகியோர் சிரியா வின் அலெப்போ பகுதியில் தன் னார்வ தொண்டு நிறுவன ஊழியர் களாக பணியாற்றி வந்தனர். அவர் களை கடந்த ஜூலை மாதம் அல்-காய்தா தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இருவரையும் கொலை செய்யப் போவதாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்த நிலையில் இத்தாலி அரசு திரைமறைவு பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டது. இதன்பயனாக இருவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கிரேட்டாவும் வானிசாவும் சிரியாவில் இருந்து துருக்கிக்கு அழைத்துச் செல்லப்பட் டனர். அங்கிருந்து விமானம் மூலம் ரோம் விமான நிலையத்துக்கு நேற்று சென்றடைந்தனர்.